Kutralam Waterfalls - Live Video Streaming
view live video feed from the famous waterfalls in South India

The Spa of South India, is a panchayat town situated at a mean elevation of 160 m (520 ft)
on the Western Ghats in Tirunelveli District of Tamil Nadu, India.


Disclaimer: This is a live video feed of Kutralam Waterfalls in Tirunelveli of Tamil Nadu, India. The video does not violate any privacy as this is a long-wide angle view of the waterfalls itself.
Please contact us if you need more information.

About Kutralam Waterfalls in Tamil


குற்றாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன.

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

Kutralam Waterfalls Live Video Streaming
குற்றாலத்தில் எண்ணெய் குளியல் விசேசமானதாகும்...

எண்ணெய் குளியலும் உடல் நலமும்...

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம். அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

எப்படிக் குளிப்பது...

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு...

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌ ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌கல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது என்ுபதா‌ல் உடலு‌க்கு ஏற்்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள். கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

எண்ணெய் குளியல் நன்மைகள்

  • உடல் சூட்டைத் தணிக்கும்
  • உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
  • திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
  • நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.
  • உடல் புத்துணர்ச்சி பெறும்
  • சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
  • ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
Kutralam Waterfalls Live Video Streaming

About Kutralam Waterfalls in English


Courtallam (Tamil: குற்றாலம்) or Kutralam, Spa of South India, is a panchayat town situated at a mean elevation of 160 m (520 ft) on the Western Ghats in Tirunelveli District of Tamil Nadu, India. Many seasonal and few perennial rivers such as the Chittar River, the Manimuthar River, the Pachaiyar River and the Tambaraparani River originate in this region. The numerous waterfalls and cascades along with the ubiquitous health resorts in the area have earned it the title the Spa of South India.[1] The falls carry a good amount of water only when there is a rain on the hills. Season begins from June of every year till September. The South West Monsoon brings in the cold breeze with mild temperature. From October to December North East Monsoon sets over in Tamil Nadu and the climate is cold and the rains are very heavy sometimes. Sometimes the falls get flooded and people are not allowed to take bath during floods.

Courtallam has nine waterfalls:

  • Peraruvi (main falls) the biggest falls in Courtallam, is about 60m high. The flow of water is interrupted by the Pongumakadal, a 19m deep crater and comes down with greatly reduced impact, making a bath safe.
  • In Chitraruvi (small falls), the flow is thin. Here naturally separate places for men and women are there to bathe.
  • At Shenbagadevi falls, the water flows through shenbaga (Michaelia champak) trees. There is also a temple there, dedicated to Shenbagadevi Amman. Shenbagadevi leads to Chitraruvi.
  • About 3 km from this is Thenaruvi (honey falls), 40m high and cascading between two large stones. In places where there is no water, one sees big honeycombs. Thenaruvi is very dangerous and it is restricted for public. But it is very common to see people vising and bathing in Thenaruvi.
  • Aintharuvi (five falls) has five separate cascades of water form this waterfalls.
  • From the orchard above flows Pazhathotta Aruvi, the 'VIP falls'. Only VIP's are allowed in Pazhathotta Aruvi.
  • The Pazhaya Courtalla Aruvi (Old Courtallam falls) used to fall into a valley from between two rocks. The valley was closed and the rocks were broken to change the course of water and make bathing easier. It was reopened later.
  • The artificial Puli Aruvi (Tiger Falls) has a moderate flow of water which collects in a lake and is diverted for irrigation, sometimes tigers visit this place for water.
  • There is another small falls inside the Government Horticulture Park above Five Falls, but it is off limits to the public.